lan sinlan eng

கொஸிப்

தொகுப்பாளராகும் கமல்ஹாசன்; பிக் பாஸ் தமிழில்

User Rating: 0 / 5

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive
 

தமிழகத்தின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தொலைக்காட்சி தொகுப்பாளராகிறார் உரக நாயகன் கமல்ஹாசன்.

சர்வேதேச நாடுகளில் மிகவும் பிரசித்திபெற்ற நிகழ்ச்சிதான் பிக் பாஸ். தற்போது விஜய் தொலைக்காட்சி நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

இந்நிகழ்ச்சியில் 15 பிரபலங்கள் ஒரே வீட்டில் நூறு நாட்கள் இணைந்து வசிக்கப்போகின்றனர். அதுவும் வெளியுலக தொடர்பில்லாமல் நூறு நாட்கள் தொடர்ந்து வசிக்கப் போகின்றனர் அதுதான் இந்த நிகழ்ச்சியின் சாராம்சம். அவர்களுக்கு எவ்வி தொலைத்தொடர்பும் வழங்கப்படமாட்டாது.

அந்த வீட்டில் கடிகாரம், நாளிதழ்கள், பேப்பர் பேனா போன்ற எந்த உபகரணங்களும் இருக்காது. இப்படியாக அவர்கள் நூறு நாட்கள் அந்த வீட்டில் வசிக்கவேண்டும்.

தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமாக இருப்பது குறித்து கமலிடம் கேட்ட போது, "விஜய் தொலைக்காட்சி என்னை முதலில் அணுகியபோது நான் சிரித்தேன். என்னைத் தவிர வேறு யார் சரியாக இருக்க முடியும் என்று. என் வாழ்க்கையில் பொது விஷயங்களோ அல்லது தனிப்பட்ட விஷயமோ, எனது ஒவ்வொரு அசைவும் கண்காணிக்கப்பட்டுதான் வந்துள்ளது.

தற்போது எதிர்மறையாக இருக்கப் போகிறது. மக்களுடன் சேர்ந்து இந்த வீட்டில் வசிப்பவர்களை நான் கண்காணிக்கவேண்டும். இந்த பிக் பாஸ் வீட்டில் பிரபலங்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்கப் போகிறேன். இந்த வீட்டில் நூறு நாட்கள் வரை வசித்து வெற்றியை தக்கவைக்க போகிறார்களா என்பதை பார்க்கப் போகிறேன்" என்று கூறினார்.

Face Book Setup 01

Back to top
Go to bottom

பிரபலமான செய்தி