lan sinlan eng

வசதிகள்

ஆறு மாதங்கள்; 100 படங்கள்

User Rating: 0 / 5

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive
 

இந்த வருடம் ஜனவரி 6ஆம் திகதி வெளியான ‘பெய்யென பெய்யும் குருதி’ படத்திலிருந்து ஜூன் 30ஆம் திகதி வரை வெளியான தமிழ் சினிமாவில் ‘யானும் தீயவன்’ வரை கடந்த 6 மாதங்களில் சுமார் 100 படங்கள் வெளியாகியுள்ளன.

சிக்கல்கள், பெரிய நாயகர்கள் படங்களின் தோல்வி, புதுமுக இயக்குநர்களின் எழுச்சி எனப் பல விடயங்களைக் கடந்துள்ளது தமிழ்த் திரையுலகம்.

விநியோகஸ்தர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு ‘பைரவா’, ‘சி3’, ‘போகன்’, ‘காற்று வெளியிடை’, ‘ப.பாண்டி’, ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’, ‘வனமகன்’, ‘கவண்’ உள்ளிட்ட படங்கள் வெளியாகின.

இவற்றில் ‘ப.பாண்டி’ மட்டுமே போட்ட முதலீட்டுக்கு மோசமில்லாமல் வசூலித்தது. மற்ற அனைத்துப் படங்களாலும் விநியோகஸ்தர்களுக்கு நட்டமே. ‘கவண்’, ‘ப.பாண்டி’, ‘கடுகு’, ‘இவன் தந்திரன்’ ஆகிய படங்கள் போட்ட முதலீட்டுக்கு மோசம் செய்யவில்லை. இதில் ‘கவண்’ திரைப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் நேரடியாக விநியோகித்தது.

முன்னணி விநியோகஸ்தர் ஒருவரிடம் பேசிய போது, “இதுவரை எந்தவொரு பெரிய நடிகரின் படமும் இலாபம் தரவில்லை. முதலில் தயாரிப்பாளர்கள் கதையைக் கேட்டு முடிவுசெய்ய வேண்டும். ஆனால், இங்கோ நடிகர்கள் கதையைக் கேட்டுப் படத்தை முடிவு செய்கிறார்கள். இது மாறினால் மட்டுமே சரியாகும்” என்றார் ஆதங்கத்துடன்.

‘அதே கண்கள்’, ‘மாநகரம்’, ‘8 தோட்டாக்கள்’, ‘ப.பாண்டி’, ‘லென்ஸ்’, ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’, ‘ரங்கூன்’, ‘மரகத நாணயம்’, ‘பண்டிகை’ ஆகிய படங்கள் மூலம் புதிய இயக்குநர்கள் கவனிக்கவைத்தார்கள். விநியோகஸ்தர்கள் தரப்பில் ‘மாநகரம்’, ‘மரகத நாணயம்’ ஆகிய படங்கள் நல்ல இலாபத்தை அளித்திருக்கின்றன.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ஏ.ஆர்.கே.சரவணன் இருவரின் அடுத்த படங்களுக்குத் தற்போதே எதிர்பார்ப்பு கூடியுள்ளது. இவர்களுடைய அடுத்த படங்களின் பெரிய நாயகர்கள் நடித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்ற பேச்சு தமிழ்த் திரையுலகில் கேட்கத் தொடங்கியுள்ளது. அதைப் போலவே லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தில் நடிக்க கார்த்தியிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்கள்.

மேலும், ‘குற்றம் 23’ திரைப்படமும் விநியோகஸ்தர்களுக்கு நல்ல இலாபமளித்தது. அருண் விஜய், இயக்குனர் அறிவழகன் இருவரின் அடுத்த படங்களையும் விநியோகஸ்தர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

பெரிதும் நஷ்டத்தை ஏற்படுத்திய படங்கள்

சி3

போகன்

அன்பானவன் அசராதவன் அடங்காதவன்

காற்று வெளியிடை

கவனம் ஈர்த்த புதிய இயக்குனர்கள்

அதே கண்கள் - ரோஹின் வெங்கடேசன்

மாநகரம் - லோகேஷ் கனகராஜ்

8 தோட்டாக்கள் - ஸ்ரீகணேஷ்

ப.பாண்டி - தனுஷ்

சங்கிலி புங்கிலி கதவ தொற - ஐக்

ஒரு கிடாயின் கருணை மனு - சுரேஷ் சங்கையா

மரகத நாணயம் - ஏ.ஆர்.கே.சரவன்

முதலுக்கு மோசமில்லை

கவண்

சங்கிலி புங்கிலி கதவ தொற

தொண்டன்

எமன்

வணிக ரீதியில் வெற்றி

மரகத நாணயம்

மாநகரம்

குற்றம் 23

Face Book Setup 01

Back to top
Go to bottom

பிரபலமான செய்தி