lan sinlan eng

லுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா

User Rating: 0 / 5

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive
 

தமிழ் சினிமா மட்டுமில்லை இந்திய சினிமாவின் மிகச்சிறந்த குணசித்திர நடிகர் நாசர். அவரின் மகன் லுத்புதின் நடித்துள்ள படம் தான் இந்த பறந்து செல்லவா, பெரிதும் எதிர்ப்பார்ப்பின்றி அமைதியாக ரிலிஸாகியுள்ளது.

கதைக்களம்

சிங்கப்பூரில் இருக்கும் லுத்புதீன் எந்நேரமும் காதல் நினைப்புடனே இருக்கிறார், அவரை எப்போதும் கிண்டல் செய்யும் இரண்டு தோழிகளை வெறுப்பேற்றவே ஒரு காதல் செய்ய வேண்டும் என்று எண்ணுகின்றார்.

அதை தொடர்ந்து இவராகவே ஒரு பேக் ஐடி ஓபன் செய்து ஏதோ ஒரு பெண்ணுடன் பேசுவது போல் ஏமாற்றி அவர்கள் முன் கெத்து காட்டுகின்றார்.

ஆனால், அந்த பேக் ஐடி ஒரு நாள் ஒரிஜினல் ஆக, கூடவே ஐஸ்வர்யா ராஜேஸின் எண்டரி என அடுத்தடுத்து என்ன நடக்கின்றது என்பதே இந்த பறந்து செல்லவா.

படத்தை பற்றிய அலசல்

லுத்புதின் நாசர் அவர்களின் மகன் என்பதால் பொறுப்பு மிக அதிகம், ஆனால், இவருக்கு ஹீரோ வேஷம் கொஞ்சம் கஷ்டம் தான், கதையின் நாயகனாகவோ அல்லது அப்பாவை போல் குணச்சித்திர நாயகனாகவோ வலம் வரலாம், ஆனாலும், தன்னால் முடிந்தவரை தன் துறுதுறு நடிப்பால் அசத்துகிறார்.

பேக் ஐடிக்கு உதவும் ஆர்.ஜே. பாலாஜி, இனி இவர் பேச தொடங்குவதற்கு முன்பே ஜோக் தான் சொல்ல வருகிறார் என பலரும் சிரித்தாலும் ஆச்சரியம் இல்லை, பல இடங்களில் ஒர்க் அவுட் ஆகியுள்ளது இவருடைய கவுண்டர் வசனங்கள்.

ஐஸ்வர்யா ராஜேஸ், அந்த சீனப்பெண் என படம் முழுவதும் இளைஞர்களுக்கு கலர்புல் விருந்து தான், அதற்கு ஏற்றார் போல் ஒளிப்பதிவும் கலர்புல்லாகவே உள்ளாது.

ஜோஸ்வா ஸ்ரீதர் இசையின் பாடல்கள் கவரவில்லை, பின்னணி இசை நன்று, இயக்குனர் படத்தை இன்னும் கொஞ்சம் விறுவிறுப்புடன் நகர்த்தியிருக்கலாம்.

info banner